லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி : இன்டர் மியாமி அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்


லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி : இன்டர் மியாமி அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
x

image courtesy;AFP

தினத்தந்தி 16 Aug 2023 12:00 PM GMT (Updated: 16 Aug 2023 12:18 PM GMT)

அரைஇறுதியில் இன்டர் மியாமி அணி பிலடெல்பியா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

பென்சில்வேனியா,

கிளப் அணிகளுக்கான லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக நட்சத்திர வீரர் மெஸ்சி விளையாடி வருகிறார். இந்த தொடரின் அரையிறுதி போட்டி ஒன்றில் இன்டர் மியாமி அணி பிலடெல்பியா அணியை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இன்டர் மியாமி முதல் பாதி நேரத்திலேயே 3 கோல்கள் அடித்து அசத்தியது. பின்னர் 2-வது பாதியிலும் மேலும் ஒரு கோல் அடித்தது. பிலடெல்பியா அணி 2-வது பாதியில் மட்டும் ஒரு கோல் அடித்தது. முழுநேர ஆட்ட முடிவில் இன்டர் மியாமி அணி 4-1 என்ற கோல் கணக்கில் பிலடெல்பியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இன்டர் மியாமி அணி தரப்பில் ஜோசப் மார்டினெஸ், லியோனல் மெஸ்சி, ஜோர்டி ஆல்பா மற்றும் டேவிட் ரூயிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதில் மெஸ்சி இன்டர் மியாமி அணிக்காக விளையாடிய ஆறு போட்டிகளிலும் கோல் அடித்துள்ளார். மொத்தம் 9 கோல்களுடன் இந்த தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இன்டர் மியாமி இறுதி போட்டியில் நாஷ்வில்லே எஸ்சி அணியுடன் 20ஆம் தேதி விளையாட உள்ளது.


Next Story