தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி...!!


தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி...!!
x

அரையிறுதி ஆட்டத்தில் ரெயில்வே அணியை விழ்த்தி தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பஞ்சாப்,

27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில், லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் தமிழக அணி ரெயில்வே அணியை இன்று எதிர்கொண்டது.

பரபரப்பாக நடந்த இப்போட்டியில் தமிழக அணி வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் இறுதியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் ரெயில்வே அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குள் தமிழக அணி நுழைந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. தமிழக அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது

இதனிடையே, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஹரியானா மற்றும் ஓடிசா அணிகள் மோத உள்ளன.இந்த ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி இறுதிப் போட்டியில் தமிழக அணியுடன் மோத உள்ளது.


Next Story