இத்தாலி கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் தெரியுமா?


இத்தாலி கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் தெரியுமா?
x

Credit : AFP

தினத்தந்தி 19 Aug 2023 7:49 AM GMT (Updated: 19 Aug 2023 7:53 AM GMT)

இத்தாலி கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக லூசியானோ ஸ்பாலெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோம்,

இத்தாலி கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ராபர்ட்டோ மான்சினி, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் இத்தாலி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 13-ந் தேதி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

அதனைத் தொடந்து தற்போது, இத்தாலி கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக லூசியானோ ஸ்பாலெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் இவர் வழிநடத்திய நபோலி அணி கோப்பையை கைப்பற்றியது. இது 33 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அணிக்கு கிடைத்த முதல் கோப்பை ஆகும்.

64 வயதான லூசியானோ ஸ்பாலெட்டி, அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் இத்தாலி கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக செயல்பட தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story