பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா காலிறுதிக்கு முன்னேற்றம்...!


பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா காலிறுதிக்கு முன்னேற்றம்...!
x

Image Courtesy: @FIFAWWC

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா காலிறுதிக்கு முன்னேறியது.

பிரிஸ்பேன்,

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 32 அணிகளில் இருந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறின.

இந்த தொடரில் இதுவரை ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற நாக் அவுட் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா - டென்மார்க் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வழக்கமான 90 நிமிட நேர முடிவில் 2 கோல்களை அடித்து அசத்தியது. டென்மார்க் அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதன் மூலம் ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


Next Story