5 நாடுகள் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி..!


5 நாடுகள் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி..!
x

Image Courtesy: @TheHockeyIndia

5 நாடுகள் இடையிலான ஆக்கி போட்டி ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் நேற்று தொடங்கியது.

வலென்சியா,

ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, இந்தியா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் இடையிலான ஆக்கி போட்டி ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் இந்தியா, 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயினை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 0 -1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

ஸ்பெயின் அணியில் அல்வாரோ இக்லிசியஸ் 29-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.


Next Story