புரோ ஆக்கி லீக்: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி


புரோ ஆக்கி லீக்: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி
x

image courtesy: HI Media via ANI

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

லண்டன்,

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐரோப்பிய சுற்று ஆட்டம் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் பணிந்தது.

இங்கிலாந்து அணியில் திமோதி நர்ஸ் 6-வது நிமிடத்திலும், சோர்ஸ்பி தாமஸ் 31-வது நிமிடத்திலும், லீ மோர்டன் 33-வது நிமிடத்திலும், பான்டுராக் நிகோலஸ் 53-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 13-வது மற்றும் 42-வது நிமிடங்களில் கோல் திருப்பினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

ஐரோப்பிய சுற்றில் இந்திய அணி தொடர்ந்து சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முந்தைய ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியத்திடம் வீழ்ந்து இருந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 2-ந் தேதி பெல்ஜியத்தை மீண்டும் சந்திக்கிறது.


Next Story