பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்ற இந்தியா


பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்ற இந்தியா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 2 Nov 2023 7:47 PM GMT (Updated: 3 Nov 2023 8:12 AM GMT)

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.

ராஞ்சி,

பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது.

இதில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக்கில் தென்கொரியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் சார்பில் சலிமா (2 கோல்) நவ்னீத் கவுர், வந்தனா, நேஹா ஆகியோர் கோல் அடித்தனர்.

லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (15 புள்ளி), சீனா (12 புள்ளி), நடப்பு சாம்பியன் ஜப்பான் (9 புள்ளி), தென்கொரியா (7 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்திய அணி அரைஇறுதியில் தென்கொரியாவுடன் நாளை மீண்டும் மோதுகிறது. மற்றொரு அரைஇறுதியில் சீனா- ஜப்பான் அணிகள் சந்திக்கின்றன.


Next Story