ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: 4-வது முறையாக 'சாம்பியன்' பட்டம் வென்றது இந்தியா


ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
x

இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

சலாலா,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடந்து வந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்றிரவு அரங்கேறியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

கடைசி கட்டத்தில் பாகிஸ்தானுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் சூப்பராக முறியடித்தனர். இந்திய அணியில் அன்கட் பிர் சிங், அராஜீத் சிங் ஹன்டல் ஆகியோர் கோல் போட்டனர். முன்னதாக நடந்த 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தென்கொரியா 2-1 மலேசியாவை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.


Next Story