ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; நெதர்லாந்து சாம்பியன்


ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; நெதர்லாந்து சாம்பியன்
x

image courtesy; twitter/@FIH_Hockey

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து மற்றும் மலேசியா அணிகள் மோதின.

மஸ்கட்,

முதலாவது ஐவர் ஆண்கள் ஆக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. 16 நாடுகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு நெதர்லாந்து மற்றும் மலேசியா அணிகள் தகுதி பெற்றன.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது ஆண்கள் 5 பேர் ஆக்கி உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

முன்னதாக நடைபெற்ற முதலாவது பெண்கள் 5 பேர் ஆக்கி உலகக்கோப்பையிலும் நெதர்லாந்து அணியே சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story