'எந்த வருத்தமும் இல்லாமல் சீனாவை விட்டு வெளியேறுவதே எங்கள் இலக்கு'- இந்திய ஆக்கி வீரர் அபிஷேக்


எந்த வருத்தமும் இல்லாமல் சீனாவை விட்டு வெளியேறுவதே எங்கள் இலக்கு- இந்திய ஆக்கி வீரர் அபிஷேக்
x

image courtesy;twitter/ @TheHockeyIndia

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இந்த மாதம் தொடங்க உள்ளது.

பெங்களூரு,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தனது முதல் பெரிய தொடருக்கு தயாராகி வரும் இந்திய ஆக்கி முன்கள வீரர் அபிஷேக், 'நம்பிக்கையுடன் விளையாடுவதும், எந்த வருத்தமும் இல்லாமல் சீனாவை விட்டு வெளியேறுவதே எங்களது இலக்கு' என்று கூறியுள்ளார்.

"எனது அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் எனக்கு உதவ ஆர்வமாக உள்ளனர். அவர்கள் என்னை ஊக்குவிப்பதோடு, பயிற்சியில் ஏதேனும் தவறுகளைச் செய்தால் விரைவாக முன்னேறுவதற்கு எனக்கு ஆதரவளிக்கிறார்கள். பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் எற்பட்டால் மன்தீப் மற்றும் லலித் ஆகியோரிடம் கேட்பேன். ஆடுகளத்திற்கு வெளியேயும் பேசுவதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.

மேலும் "இந்திய அணியில் இடம்பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் அணிக்காக எனது அனைத்து பங்களிப்பையும் கொடுக்க ஆர்வமாக உள்ளேன். ஆசிய விளையாட்டு ஒரு பெரிய போட்டியாகும். அதற்கேற்றவாறு நாங்கள் தயாராகி வருகிறோம். நாங்கள் நம்பிக்கையுடன் விளையாடுவோம். போட்டியின் முடிவில் எந்த வருத்தமும் இல்லாமல் சீனாவை விட்டு வெளியேறுவதே எங்கள் குறிக்கோள், "என்று கூறியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி குறித்து கேட்டபோது, "நாங்கள் சில நல்ல அணிகளை எதிர்கொள்ள உள்ளோம். அதற்கு நாங்கள் சிறந்த உடல் மற்றும் நல்ல மன நிலையில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த பயிற்சியில் மிகவும் கடினமாக உழைக்கிறோம்''என்று பதிலளித்தார்.


Next Story