ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க தயார் - இந்திய ஆக்கி வீராங்கனை சலிமா டெட்


ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க தயார் - இந்திய ஆக்கி வீராங்கனை சலிமா டெட்
x

image courtesy; AFP

தினத்தந்தி 25 Dec 2023 7:41 AM GMT (Updated: 25 Dec 2023 7:50 AM GMT)

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றதன் மூலம் இந்திய ஆண்கள் ஆக்கி அணி பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடைபெற உள்ள பெண்கள் ஆக்கி தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ராஞ்சியில் அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தகுதி சுற்றில் இந்தியா 'பி' பிரிவில் அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க தயார் என்று இந்திய ஆக்கி வீராங்கனை சலிமா டெட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'ராஞ்சியில் நடைபெறும் இந்த போட்டி தகுதி சுற்று மட்டுமல்ல நாங்கள் விரும்பும் விளையாட்டில் எங்களின் அர்ப்பணிப்பையும் இடைவிடாத மனப்பான்மையையும் வெளிப்படுத்த எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகும். நாங்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். நம்பிக்கையுடன் விளையாடி பாரீஸ் ஒலிம்பிக்கில் எங்களின் இடத்தை பிடிப்போம். அந்த உலகளாவிய அரங்கில் இந்திய அணியை வெற்றி பெற வைப்போம்' என்று கூறினார்.

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றதன் மூலம் இந்திய ஆண்கள் ஆக்கி அணி பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story