ஸ்பெயின் ஆக்கி தொடர்: கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி


ஸ்பெயின் ஆக்கி தொடர்: கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி
x

Image Courtesy : @TheHockeyIndia twitter

தினத்தந்தி 30 July 2023 8:08 PM GMT (Updated: 31 July 2023 12:37 AM GMT)

இந்திய அணி 2 வெற்றி, 2 டிரா என்று 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது.

பார்சிலோனா,

ஸ்பெயின் ஆக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து பெண்கள் அணிகள் பங்கேற்ற ஆக்கித் தொடர் அங்குள்ள பார்சிலோனா நகரில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. இந்திய அணி நேற்று நடந்த கடைசி லீக்கில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அமர்க்களப்படுத்தியது.

வந்தனா கட்டாரியா (22-வது நிமிடம்), மோனிகா (48-வது நிமிடம்), உதிதா (58-வது நிமிடம்) ஆகியோர் இந்திய அணியில் கோல் அடித்தனர். ஸ்பெயினின் சில கோல் வாய்ப்புகளை இந்திய கேப்டனும், கோல் கீப்பருமான சவிதா அருமையாக செயல்பட்டு முறியடித்தார். இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியா 2 வெற்றி, 2 டிரா என்று 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது. ஸ்பெயின், இங்கிலாந்து தலா 4 புள்ளிகள் பெற்றன.
Next Story