சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை: இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் சமன்


சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை: இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் சமன்
x

Image Courtesy: PTI 

இந்திய அணி கடைசி கட்டத்தில் கோல் அடிக்க, போட்டி 5-5 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

ஜோகூர்,

21 வயதுக்கு உட்பட்டோருக்கான 10-வது சுல்தான் ஆப் ஜோகூர் ஆக்கி கோப்பை தொடர் தற்போது மலேசியாவின் ஜோகூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி - ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கடைசி கட்டத்தில் கோல் அடிக்க, போட்டி 5-5 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்திய அணியின் தரப்பில் பாபி சிங் தாமி (2வது நிமிடம் ), ஷர்தா நந்த் திவாரி (8வது மற்றும் 35வதுநிமிடம்), அரிஜித் சிங் ஹண்டால் (18-வது நிமிடம்), அமன்தீப் (60வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் லியாம் ஹார்ட் (3வது நிமிடம்), ஜாக் ஹாலண்ட் (8வது நிமிடம்), ஜோசுவா புரூக்ஸ் (20வது மற்றும் 41வது நிமிடம்), ஜேக் லம்பேத் (49வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் மலேசியாவை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. பின்னர் ஜப்பான் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story