சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தெற்கு ரெயில்வே- தபால் துறை ஆட்டம் 'டிரா'


சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தெற்கு ரெயில்வே- தபால் துறை ஆட்டம் டிரா
x

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் எஸ்.டி.ஏ.டி. அணி 5-2 என்ற கோல் கணக்கில் வருமான வரியை தோற்கடித்தது.

எஸ்.டி.ஏ.டி. அணியில் மனோஜ்குமார் 2 கோலும், நவீன் ராஜ்குமார், முரளி கிருஷ்ணன், ஆனந்த ராஜ் தலா ஒரு கோலும் அடித்தனர். வருமான வரி அணியில் செந்தில் நாயகம், அருண்குமார் தலா ஒரு கோல் திருப்பினர்.

தெற்கு ரெயில்வே-தமிழ்நாடு தபால் துறை அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தெற்கு ரெயில்வே அணியில் மனோஜ், சண்முகம் தலா ஒரு கோலும், தபால் துறை அணியில் மோகன் ராஜ், நவின்குமார் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் வங்கி-ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி (பிற்பகல் 2 மணி), ஸ்டேட் வங்கி-அடையார் யுனைடெட் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story