சென்னையில் சர்வதேச செஸ் போட்டி 2 நாள் நடக்கிறது


சென்னையில் சர்வதேச செஸ் போட்டி 2 நாள் நடக்கிறது
x

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் 6-வது சாஸ்திரா சர்வதேச ரேபிட் செஸ் போட்டி நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் 6-வது சாஸ்திரா சர்வதேச ரேபிட் செஸ் போட்டி நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதில் ஸ்ரீநாத் நாராயணன், விஷ்ணு பிரசன்னா, பிரனேஷ், தீபன் சக்ரவர்த்தி, ஆர்.ஆர். லட்சுமண், ஸ்ரீஹரி, ரக்ஷிதா ரவி, ஸ்ரீஜா சேஷாத்ரி, வர்ஷினி உள்ளிட்டோரும் அடங்குவர். 9 சுற்று கொண்ட இந்த தொடரில் முதல் நாளில் 5 சுற்றும், 2-வது நாளில் 4 சுற்றும் நடைபெறும்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.5 லட்சமாகும். முதல் 3 இடங்களை பிடிப்போருக்கு முறையே ரூ.65 ஆயிரம், ரூ.45 ஆயிரம், ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.


Next Story