கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு; ஆந்திர முதல்வர் அறிவிப்பு


கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு; ஆந்திர முதல்வர் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2017 9:51 AM GMT (Updated: 2017-06-29T15:21:34+05:30)

பேட்மிண்டன் போட்டிகளில் தொடர் சாதனைகள் புரிந்த ஸ்ரீகாந்திற்கு ரூபாய் 50 லட்சம் பரிசுதொகை அறிவித்துள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திரபிரதேசம்,

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் இரு தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இவ்விரு போட்டிகளிலும் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றுள்ள முதல் இந்தியர் ஸ்ரீகாந்த் ஆவார். 

இதனை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அவரது சொந்த மாநிலமான ஆந்திரபிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஸ்ரீகாந்திற்கு ரூபாய் 50 லட்சம் பரிசு அறிவித்திருந்தார். அதோடு ஆந்திர மாநிலத்தில் குருப் 1 அதிகாரி பதவி வழங்குவதாகவும் அறிவித்தார். அவருக்கு பயிற்சி அளித்த புலெலா கோபிசந்திற்கும் ரூபாய் 15 லட்சம் பரிசுதொகை அறிவிக்கப்பட்டது.

விஜயவாடாவில் நடைபெற்ற பாரட்டு விழாவின் போது பரிசுதொகைக்கான காசோலையை ஸ்ரீகாந்திடம் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.  

அப்போது நினைவு பரிசாக தான் பயன்படுத்திய பேட்மிண்டன் ரக்கெட்டை சந்திரபாபு நாயுடுவிடம் ஸ்ரீகாந்த் பரிசளித்தார்.

பின்னர் பேசிய ஸ்ரீகாந்த் ”சந்திரபாபு நாயுடுவால் கோபிசந்திற்கு பரிசாக வழங்கப்பட்ட இடத்திலேயே நான் பயிற்சி பெற்றேன், ஆந்திராவுக்காக தான் இதுவரை விளையாடி வருகிறேன். எதிர்காலத்திலும் ஆந்திராவுக்காக தான் விளையாடுவேன்” என்றார்.

Next Story