உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக சஞ்சனா பங்கேற்பு


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக சஞ்சனா பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Aug 2017 10:44 AM GMT (Updated: 7 Aug 2017 10:43 AM GMT)

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக சஞ்சனா சந்தோஷ் பங்கேற்க உள்ளார்.

தானே

இருபது வயது கல்லூரி மாணவியான சஞ்சனா 10 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். வருகிற 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஸ்காட்லாந்தில் இப்போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்றதன் விளைவாக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாண்டு ஏப்ரலில் அவரது சர்வதேச தர வரிசை 550 ஆம் இடத்திலிருந்து 33 ஆம் இடத்திற்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சஞ்சனாவுடன் சேர்த்து பி வி சாந்து, சாய்னா நேவால், கே மணீஷா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அவர் 2015 ஆம் ஆண்டில் பெரு நாட்டில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார். சஞ்சனா 2016 ஆம் ஆண்டில் போலந்து ஓபன் போட்டியில் இரட்டையர் சாம்பியன்ஷிப்பை வென்றார். அதே ஆண்டில் இதர போட்டிகளிலும் பங்கேற்றார். பின்னர் 2017 ஆம் ஆண்டில் டெஹ்ரான், டாக்கா மற்றும் பிரேக் போட்டிகளிலும் பங்கேற்றார். 

சஞ்சனா சர்வதேச போட்டிகளில் கடந்த 6 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறார். தனது ஏழாவது வயதில் அவர் பேட்மிண்டன் விளையாடத் துவங்கியதாக கூறப்படுகிறது. 


Next Story