தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு


தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு
x
தினத்தந்தி 12 Nov 2017 9:00 PM GMT (Updated: 12 Nov 2017 9:00 PM GMT)

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவர் தேர்தல் நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவர் தேர்தல் நடந்தது. தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்திய பேட்மிண்டன் சங்க செயலாளர் புனியா சவுத்ரி, கர்நாடக பேட்மிண்டன் சங்க தலைவர் என்.சி.சுதிர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி டேனியல் ஆகியோர் தேர்தல் கண்காணிப்பாளராக இருந்து இந்த தேர்தலை நடத்தினார்கள். சாம்பியன் பட்டம் வென்ற அனைத்து மாவட்ட வீரர்–வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ‘என்னை மீண்டும் தலைவராக தேர்வு செய்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழக பேட்மிண்டன் வீரர்கள் தேசிய அளவில் மட்டுமின்றி ஆசிய, காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற வைக்கும் வகையில் கடுமையாக உழைப்பேன்’ என்று தெரிவித்தார்.


Next Story