ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, சிந்து வெற்றி


ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, சிந்து வெற்றி
x
தினத்தந்தி 22 Nov 2017 9:00 PM GMT (Updated: 2017-11-23T00:53:38+05:30)

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நடந்து வருகிறது.

கெவ்லோன்,

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–19, 23–21 என்ற நேர்செட்டில் மெட்டே போல்செனை (டென்மார்க்) வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 2–ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து 21–18, 21–10 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை லீயுங் யுட்டை எளிதில் வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 19–21, 21–17, 21–15 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஹூ யுன்னை சாய்த்து 2–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் நீடித்தது. அதே சமயம் காஷ்யப், சவுரப் வர்மா, சாய் பிரனீத் ஆகிய இந்தியர்கள் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.


Next Story