சர்வதேச பேட்மிண்டன் இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் சாம்பியன்


சர்வதேச பேட்மிண்டன் இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் சாம்பியன்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:15 PM GMT (Updated: 25 Feb 2018 7:15 PM GMT)

சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் சாம்பியன்.

வியன்னா,

ஆஸ்திரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி வியன்னாவில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிசுற்றில் இந்திய வீரர் காஷ்யப் 23-21, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெறும் 37 நிமிடங்களில் மலேசியாவின் ஜூன் வெய் சியாமை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் பெற்ற முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.

இதே போல் பாசெல் நகரில் நடந்த சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-15, 21-13 என்ற நேர் செட்டில் முன்னாள் 2-ம் நிலை வீரர் ஜான் ஓ ஜோர்கென்சனை (டென்மார்க்) சாய்த்து மகுடம் சூடினார்.

Next Story