காமன் வெல்த் விளையாட்டு போட்டி மல்யுத்த வீரா் சுஷில் குமார் பெயர் இல்லை


காமன் வெல்த் விளையாட்டு போட்டி மல்யுத்த வீரா் சுஷில் குமார் பெயர் இல்லை
x
தினத்தந்தி 30 March 2018 7:28 AM GMT (Updated: 30 March 2018 7:28 AM GMT)

காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களின் பட்டியலில் மல்யுத்த வீரா் சுஷில் குமாாின் இடம்பெறாத சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #SushilKumar #CWG2018

புதுடெல்லி,

2018ம் ஆண்டு காமன் வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா சாா்பில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்கள் பட்டியல் விழா அமைப்பாளா்கள் தரப்பில் வெளியிடப்பட்டது.

வீரா்கள் பெயா் பட்டியலில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு மல்யுத்தத்தில் இரண்டு முறை பதக்கம் வென்ற கூஷில் குமாரின் பெயா் இடம் பெறவில்லை. 74 கிலோ எடை பிாிவில் குத்துச்சண்டை வீரா்கள் பட்டியலில் இடம் பெற வேண்டிய சுஷில் குமாாின் பெயா் விடுபட்டுள்ளது.போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்ட மல்யுத்த வீரர்கள் பட்டியலில் சுஷில்குமார் பெயர் இடம்பெறவில்லை 

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு முறை பதக்கம் வென்ற வீராின் பெயா் காமன் வெல்த் தொடரில் இடம்பெறாதது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. 

சுஷில்குமார் பெயர் இல்லை பட்டியலில் தவறுதலாக விடுபட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story