பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
பேட்மிண்டனில் இந்தியா அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
கோல்டுகோஸ்ட்,

* பேட்மிண்டன் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் மொரிஷியஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. அரைஇறுதியில் சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.


* டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் மலேசியாவையும், இந்திய பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தன.

* குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் ஹூஸ்சாமுதின் முகமது (56 கிலோ), மனோஜ்குமார் (69 கிலோ), வீராங்கனை சரிதா தேவி (60 கிலோ) ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

* ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா கால்இறுதியில் தோல்வி கண்டு வெளியேறினார். இத்துடன் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

* கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் 54-100 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. பெண்கள் பிரிவில் இந்திய அணி தன்னுடைய 2-வது லீக் ஆட்டத்தில் 72-85 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவிடம் வீழ்ந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘போட்டி தொடரை முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து
‘இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை நாங்கள் முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் தெரிவித்தார்.
2. மியான்மரில் துறைமுகம் கட்டும் சீனா ! உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் துறைமுகம் கட்டுவதற்கு சீனா ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
3. தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை - மத்திய அரசு
ரஷியாவில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்கிறோமே தவிர, தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல் ! இந்திய அணி 195 ரன்கள் குவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 195 ரன்கள் குவித்துள்ளது.
5. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.