பிற விளையாட்டு

காமன்வெல்த் போட்டி; டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலம் + "||" + Commonwealth Games India's bronze in table tennis mixed doubles

காமன்வெல்த் போட்டி; டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலம்

காமன்வெல்த் போட்டி; டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலம்
காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. #CWG2018
கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இன்றுடன் நிறைவு பெறவுள்ள இந்த விளையாட்டு திருவிழாவின் 11-வது நாளான இன்று இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியது.

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் - மணிகா பத்ரா ஜோடி, சரத் அக்சந்தா-மவுமா ஜோடியை எதிர்த்து வெற்றி அடைந்தது. இதன் மூலம் இந்த ஜோடி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டியின் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் இது மணிகா பத்ரா பெறும்  4வது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 19 வெண்கலம் உள்பட 60 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை