அர்ஜூனா விருதுக்கு மனிகா பத்ரா பெயர் பரிந்துரை


அர்ஜூனா விருதுக்கு மனிகா பத்ரா பெயர் பரிந்துரை
x
தினத்தந்தி 21 April 2018 10:30 PM GMT (Updated: 21 April 2018 8:14 PM GMT)

அர்ஜூனா விருதுக்கு மனிகா பத்ரா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

டெல்லி,

சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா 4 பதக்கங்களை (தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் தங்கம், பெண்கள் இரட்டையரில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் வெண்கலம்) கைப்பற்றி சாதனை படைத்தார். டேபிள் டென்னிசில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள டெல்லியை சேர்ந்த 22 வயதான மனிகா பத்ராவின் பெயரை அர்ஜூனா விருதுக்காக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு, இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஹர்மீத் தேசாய் பெயரும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Next Story