பிற விளையாட்டு

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: மனு பாக்கர், அன்மோல் ஜெயின் ஜோடி தங்கம் வென்றது + "||" + International shooter competition: Manu Paker and Anmol Jain won gold

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: மனு பாக்கர், அன்மோல் ஜெயின் ஜோடி தங்கம் வென்றது

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: மனு பாக்கர், அன்மோல் ஜெயின் ஜோடி தங்கம் வென்றது
சர்வதேச துப்பாக்கி சுடு போட்டியில் இந்திய வீரர்களான மனு பாக்கர் மற்றும் அன்மோல் ஜெயின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். #InternationalShooterCompetition
பில்சேன்,

28-வது சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகள் செக் குடியரசின் பில்சேன் நகரில் நடைபெற்று வந்தன.

இதில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் அன்மோல் ஜெயின் ஆகியோர் கலப்பு 10மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் போட்டியிட்டனர். இருவரும்  476.9 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தினை தட்டிச் சென்றனர். மற்றொரு இந்திய இணையான தேவன்ஷி ராணா மற்றும் சௌரப் சவுதிரி 1.2 புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடம் பிடித்தனர்.

மற்றொரு கலப்பு 10மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில், இந்திய அணியின் ஸ்ரேயா அகர்வால் மற்றும் ஹரிதாய் ஹசாரிக்கா ஜோடி (496.5) வெள்ளிப் பதக்கமும், இளவேனில் வாலறிவன் மற்றும் திவ்யான்ஷ் சிங் பன்வார் ஜோடி(433.9) வெண்கலப் பதக்கமும் வென்றனர். இத்தாலி இணையான சோபியா பெனெட்டி மற்றும் மார்கோ சுப்னி ஜோடி 497.0 புள்ளி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

இந்த போட்டிகளில் இந்தியா, 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கல பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்தது. இந்தப்போட்டிகளில் மனு பாக்கர் 4 தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

50மீட்டர் ஆடவர் ஜூனியர் பிஸ்டல் பிரிவில், அர்ஜுன் சிங் சீமா (563), அன்மோல் (554), விஜயவீர் சித்து (553) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை