துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 22 Sep 2018 9:45 PM GMT (Updated: 22 Sep 2018 6:49 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.


* உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி டோகாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி தொடங்கி நவம்பர் 3-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வு முகாம் வருகிற 29, 30-ந்தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. தீபா கர்மாகர், ராகேஷ் பத்ரா உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

* விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் பெங்கால்-திரிபுரா, அரியானா- ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு-ராஜஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

* ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 19-ந்தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தனது தோளில் பாகிஸ்தான் தேசிய கொடியை போர்த்திக் கொண்டு மிகுந்த மரியாதையுடன் இந்திய தேசிய கீதத்தை பாடினார். நெகிழ்ச்சியடைய வைத்துள்ள இந்த வீடியோ காட்சி இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த ரசிகருக்கு பாராட்டுகளும் குவிகிறது.

* ஆசிய கிரிக்கெட்டில் எஞ்சிய ஆட்டங்களுக்கான வங்காளதேச அணியில் பேட்ஸ்மேன்கள் சவும்யா சர்கார், இம்ருல் கேயஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்துள்ள வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா அளித்த பேட்டியில், ‘சரியாக ஆடாததால் தான் அவர்கள் இருவரும் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டனர். தற்போது அவர்களை அணிக்கு தேர்வு செய்தது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரியம் என்னிடம் எதுவும் ஆலோசிக்கவில்லை. இங்குள்ள கடினமான சீதோஷ்ண நிலையில் உடனடியாக களம்இறங்கி அவர்களால் நன்றாக ஆட முடியுமா? என்பது தெரியவில்லை’ என்றார்.


Next Story