புரோ கபடி லீக்: குஜராத்தை வென்றது அரியானா


புரோ கபடி லீக்: குஜராத்தை வென்றது அரியானா
x
தினத்தந்தி 12 Oct 2018 9:45 PM GMT (Updated: 2018-10-13T00:50:40+05:30)

புரோ கபடி லீக் போட்டியில் அரியானா அணி, குஜராத்தை வென்றது.

சோனிபட்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்டில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அசத்தலாக ஆடிய அரியானா அணி 32-25 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை சாய்த்து முதலாவது வெற்றியை சுவைத்தது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41-37 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது.

இதே மைதானத்தில் இன்று நடக்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- உ.பி.யோத்தா (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.


Next Story