தேசிய தடகள போட்டிக்கு சிவந்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் தேர்வு


தேசிய தடகள போட்டிக்கு சிவந்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் தேர்வு
x
தினத்தந்தி 14 Nov 2018 9:30 PM GMT (Updated: 14 Nov 2018 7:16 PM GMT)

தேசிய தடகள போட்டிக்கு, சிவந்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.

நெல்லை,

குடியரசு தின மாநில அளவிலான தடகள போட்டி நெய்வேலியில் நடந்தது. இதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள சிவந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவசெல்வ லட்சுமணன் 1.83 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் தேசிய பள்ளி விளையாட்டு போட்டிக்கான தமிழக அணிக்கு சிவசெல்வ லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Next Story