கேலோ இந்தியா தேசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை தபிதா 2 பதக்கம் வென்றார்


கேலோ இந்தியா தேசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை தபிதா 2 பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 11 Jan 2019 9:53 PM GMT (Updated: 11 Jan 2019 9:53 PM GMT)

கேலோ இந்தியா தேசிய விளையாட்டு போட்டியில், தமிழக வீராங்கனை தபிதா 2 பதக்கம் வென்றார்.

புனே,

கேலோ இந்தியா தேசிய இளையோர் விளையாட்டு போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா 14.14 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். நீளம் தாண்டுதலில் தபிதா 5.57 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 2 பதக்கம் வென்ற தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.


Next Story