ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்


ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 17 July 2019 11:45 PM GMT (Updated: 2019-07-18T05:15:23+05:30)

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்.

புதுடெல்லி,

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் போட்டியில் தகுதி சுற்றில் 584 புள்ளிகளுடன் முன்னிலை வகித்த இந்திய வீரர் அனிஷ் பன்வாலா இறுதி சுற்றில் 29 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இறுதி சுற்றில் ரஷிய வீரர் இகோர் இஸ்மாகோவ் 23 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனி வீரர் புளோரியன் பீட்டர் 19 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்ற இந்திய வீரர்கள் ஆதர்ஷ் சிங் (17 புள்ளிகள்) 4-வது இடமும், அக்னியா கவுசிக் (9 புள்ளிகள்) 6-வது இடமும் பிடித்தனர். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கங்கள் வென்று முதலிடத்தில் இருந்து வருகிறது.


Next Story