இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி


இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி
x
தினத்தந்தி 18 July 2019 11:41 PM GMT (Updated: 18 July 2019 11:41 PM GMT)

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் கால்இறுதிக்கு சிந்து தகுதிபெற்றார்.

ஜகர்தா,

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்ட்டை போராடி தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 62 நிமிடம் நீடித்தது. சிந்து கால்இறுதியில் முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) இன்று சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 17-21, 19-21 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் நிகா லாங் அங்குஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

Next Story