தேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள்


தேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 July 2019 11:52 PM GMT (Updated: 24 July 2019 11:52 PM GMT)

தேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள் விடுத்துள்ளது.

பானாஜி,

36-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் 2018-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது இந்த ஆண்டு (2019) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் குறுக்கீடு காரணமாக நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது நவம்பர் மாதத்திலும் தேசிய விளையாட்டு நடைபெறாது என்று தெரியவந்துள்ளது. போட்டிக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறாததால் மேலும் 5 மாதம் காலஅவகாசம் தருமாறு கோவா அரசு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு (2020) மே மாதத்தில் தேசிய விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான தேதியை ஒதுக்கீடு செய்ய இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்து இருப்பதாக கோவா முதல்-மந்திரி பிரமோத் சவாந்த் சட்டசபையில் நேற்று தெரிவித்தார். இந்த வேண்டுகோளை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக்கொள்ளுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.


Next Story