பிற விளையாட்டு

3,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தடகள போட்டி - சென்னையில் நாளை தொடக்கம் + "||" + 3,500 player-athletes participating in the Athletic Tournament - starting tomorrow in Chennai

3,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தடகள போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்

3,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தடகள போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்
3,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தடகள போட்டி, சென்னையில் நாளை தொடங்க உள்ளது.
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், தமிழ்நாடு தடகள சங்கம் அனுமதியுடன் மாவட்டங்களுக்கு இடையிலான 34-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை முதல் 1-ந் தேதி வரை நடக்கிறது. 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியின் அடிப்படையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் செப்டம்பர் 14, 15-ந் தேதிகளில் நடைபெறும் 31-வது தென்மண்டல ஜூனியர் தடகள போட்டி மற்றும் திருவண்ணாமலையில் செப்டம்பர் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் 17-வது பெடரேஷன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.