கத்தார் சர்வதேச பளுதூக்குதல்: இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்


கத்தார் சர்வதேச பளுதூக்குதல்: இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 20 Dec 2019 11:54 PM GMT (Updated: 20 Dec 2019 11:54 PM GMT)

கத்தார் சர்வதேச பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

தோகா,

6-வது கத்தார் சர்வதேச கோப்பை பளுதூக்குதல் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் ஒன்றான இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீராபாய் சானு ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 83 கிலோவும், ‘கிளன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் 111 கிலோவும் என மொத்தம் 194 கிலோ எடைதூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இருப்பினும் அவர் இன்னும் தனது சிறந்த நிலையை எட்டவில்லை. இந்த ஆண்டில் தாய்லாந்தில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு 201 கிலோ எடை தூக்கி இருந்தார்.


Next Story