பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகளம்: சென்னையில் நாளை தொடங்குகிறது


பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகளம்: சென்னையில் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 18 Jan 2020 11:18 PM GMT (Updated: 18 Jan 2020 11:18 PM GMT)

பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டிகள், சென்னையில் நாளை தொடங்க உள்ளது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் பள்ளி மாணவிகளுக்கான 2-வது மாநில தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. சீனியர் (9 மற்றும் 10-ம் வகுப்பு), சூப்பர் சீனியர் (பிளஸ் 1, பிளஸ் 2) ஆகிய பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் 100 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 50 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு பந்தயத்திலும் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1,000, 2-வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.750, 3-வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 ரொக்கப்பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படும். இந்த தகவலை எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story