பள்ளி அணிகளுக்கான கூடைப்பந்து போட்டி: சென்னையில் நாளை தொடங்குகிறது


பள்ளி அணிகளுக்கான கூடைப்பந்து போட்டி: சென்னையில் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 3 Feb 2020 11:28 PM GMT (Updated: 3 Feb 2020 11:28 PM GMT)

பள்ளி அணிகளுக்கான கூடைப்பந்து போட்டி, சென்னையில் நாளை தொடங்க உள்ளன.

சென்னை,

எழும்பூர் நண்பர்கள் கூடைப்பந்து கிளப் சார்பில் பள்ளி அணிகளுக்கான மாவட்ட அளவிலான முதலாவது கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நாளை (புதன்கிழமை) முதல் 8-ந் தேதி வரை மின்னொளியில் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த போட்டியில் 32 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணியினருக்கு பரிசுகள் வழங்கப்படும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, சமீபத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபி பிரையன்ட் சுழற்கோப்பை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story