முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி: சேலம், திண்டுக்கல் அணிகள் ‘சாம்பியன்’


முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி: சேலம், திண்டுக்கல் அணிகள் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 16 March 2020 10:30 PM GMT (Updated: 16 March 2020 9:01 PM GMT)

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.

மதுரை,

லீக் முறையில் நடந்த இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் நடந்த இறுதி லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 39-10 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. ஆண்கள் பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கரூா் அணி 27-21 என்ற புள்ளி கணக்கில் சேலம் அணியை வென்றது.

ஆண்கள் பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவில் சேலம், கரூர், கன்னியாகுமரி அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி கண்டு சமநிலை வகித்தன. போட்டியில் பெற்ற புள்ளிகள் வித்தியாசத்தின் அடிப்படையில் சேலம் அணி சாம்பியன் பட்டத்தையும், கரூர் அணி 2-வது இடத்தையும், கன்னியாகுமரி அணி 3-வது இடத்தையும் பெற்றன. பெண்கள் பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் திண்டுக்கல் அணி 3 வெற்றியுடன் முதலிடத்தை பிடித்தது. கோவை, சென்னை அணிகள் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் சமநிலை வகித்தன. போட்டியில் எடுத்த புள்ளிகள் வித்தியாசத்தில் கோவை அணி 2-வது இடம் பெற்றது. சென்னை அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Next Story
  • chat