உலக மல்யுத்த போட்டியில் பங்கேற்க மாட்டேன்: பஜ்ரங் பூனியா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட இந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர் நார்வேயில் வருகிற அக்டோபர் 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட முடியாது.
இது குறித்து பஜ்ரங் பூனியா கூறுகையில், ‘முழங்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவை சரிப்படுத்துவதற்காக உடற்பயிற்சியை 6 வாரம் மேற்கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் என்னால் பங்கேற்க முடியாது. இந்த ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் தவிர வேறு முக்கியமான போட்டியில்லை. இந்த சீசனில் மற்ற போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் எனக்கு கிடையாது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வலியுடன் பங்கேற்று தான் பதக்கம் வென்றேன்’ என்றார்.
Related Tags :
Next Story