ஆசிய இளையோர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம்


ஆசிய இளையோர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம்
x
தினத்தந்தி 31 Aug 2021 2:05 AM IST (Updated: 31 Aug 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய இளையோர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம் கிடைத்துள்ளது.

துபாய், 

ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை போட்டி துபாயில் நடந்தது. இதில் நேற்று நடந்த இளையோர் பிரிவு பந்தயங்களில் இந்தியா 3 தங்கம் உள்பட 7 பதக்கம் வென்றது. 

ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக இளையோர் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரரான பிஷ்வாமித்ரா சோங்தம் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் குஜிபோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். 

80 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விஷால் 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் அக்மாடோவ் சான்ஜரை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீரர்கள் விஸ்வநாத் சுரேஷ் (48 கிலோ), வன்ஷாஜ் (63 கிலோ), ஜெய்தீப் ராவத் (71 கிலோ) ஆகியோர் தங்களது இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டனர். 

இதேபோல் பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நேகா 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அஸ்ஹாகுல்லை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்கள். மற்ற இந்திய வீராங்கனைகள் நிவேதிதா (48 கிலோ), தமன்னா (50 கிலோ), சிம்ரன் (52 கிலோ) ஆகியோர் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.
1 More update

Next Story