ஆசிய கைப்பந்து: கத்தார் அணியிடம் இந்தியா தோல்வி


ஆசிய கைப்பந்து: கத்தார் அணியிடம் இந்தியா தோல்வி
x
தினத்தந்தி 13 Sep 2021 10:56 PM GMT (Updated: 2021-09-14T04:26:30+05:30)

16 அணிகள் பங்கேற்றுள்ள 21-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.

இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் கத்தாரை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 22-25, 14-25, 20-25 என்ற நேர்செட்டில் கத்தாரிடம் வீழ்ந்தது. இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோற்று இருந்தது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பானை சந்திக்கிறது.

Next Story