துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை: பெருவில் இன்று தொடங்குகிறது


துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை: பெருவில்  இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 27 Sep 2021 11:20 AM GMT (Updated: 27 Sep 2021 11:50 AM GMT)

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்

லிமா,பெரு .

2021 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை பெரு நாட்டின் லிமா நகரில் இன்று தொடங்குகிறது. 

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.பிஸ்டல், ரைபிள் மற்றும் ஷாட்கன் என பல பிரிவுகளின் கீழ் இந்திய அணி பங்கேற்கிறது.

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் மனு பாக்கர் ,பிரதாப் சிங்க் டோமரும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர் . மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே  தொடங்கி இருக்கும் இந்த தொடரில் இந்திய அணி பல பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Next Story