ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்திய அணிக்கு வெண்கலம்
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென்கொரிய அணி இறுதியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா ,கத்தார் .
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஈரான் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஷரத் கமல் ,சத்யன் ஞானசேகரன் ,ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி வலுவான தென்கொரிய அணியை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென்கொரிய அணி இறுதியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதனால் இந்திய அணி வெண்கல பதக்கத்துடன் போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த ஆண்டு ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்யில் இந்திய அணி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
Related Tags :
Next Story