இந்த சாதனை வெறும் தொடக்கம் தான்: நீரஜ் சோப்ரா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Nov 2021 3:15 AM GMT (Updated: 12 Nov 2021 3:15 AM GMT)

இந்த சாதனை வெறும் தொடக்கம் தான் என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சண்டிகார்,

பானிபட் அருகே உள்ள கந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த 23 வயது விவசாயியின் மகன் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக்கில் தடகளப் பதக்கத்திற்காக இந்தியாவின் 100 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவுகட்டினார். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘எனது விளையாட்டு வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க சிலர் அணுகினர். ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால், இச்சாதனை வெறும் தொடக்கம் தான். இது தான் எனது முதல் ஒலிம்பிக். இன்னும் நான் நிறைய பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் பிறகு படம் எடுத்தால் நன்றாக ஓடும். இப்போது எனது கவனம் முழுவதும் விளையாட்டு மீதே உள்ளது’ என்று நீரஜ் சோப்ரா கூறினார்.

Next Story