இந்திய ஓபன் பேட்மிண்டன் :பி.வி சிந்து,லக்சயா சென் ,அரையிறுதிக்கு முன்னேற்றம்


இந்திய ஓபன் பேட்மிண்டன் :பி.வி சிந்து,லக்சயா சென் ,அரையிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 14 Jan 2022 1:33 PM GMT (Updated: 14 Jan 2022 2:34 PM GMT)

புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன

புதுடெல்லி,

புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பி .வி.சிந்து ,சாலிஹா ஆகியோர் விளையாடினர்.

34 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், 21-7, 21-18 என்ற செட் கணக்கில் சாலிஹாவை  பி .வி.சிந்து வீழ்த்தினார் .

இதேபோன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றொரு போட்டியில், எஸ்.பிரணாய் ,லக்ஷ்யா சென் ஆகியோர் விளையாடினர் . 14-21 21-9 21-14  என்ற செட் கணக்கில் எஸ்.பிரணாயை  வீழ்த்தி லக்சயா சென் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் 

Next Story