இந்திய பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி


இந்திய பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி
x
தினத்தந்தி 15 Jan 2022 9:53 PM GMT (Updated: 15 Jan 2022 9:53 PM GMT)

இந்திய பேட்மிண்டன் அரைஇறுதியில் சிந்து தோல்வி அடைந்தார்.

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில், ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபாண்டியா கேடேதாங்கை சந்தித்தார். 59 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 21-13, 10-21 என்ற செட் கணக்கில் சுபாண்டியாவிடம் போராடி வீழ்ந்து நடையை கட்டினார். இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அகார்ஷி காஷ்யப் 24-26, 9-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானிடம் பணிந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் சரிவில் இருந்து மீண்டு வந்து 19-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் மலேசியாவின் தி யாங்கை சாய்த்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் லக்‌ஷயா சென், நடப்பு உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோக் கின் யிவ்வை எதிர்கொள்கிறார்.


Next Story