3,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகள போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்


3,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகள போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்
x

கோப்புப்படம் 

36-வது மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 36-வது மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 7-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 4 வகையான வயது பிரிவில் இருபாலருக்கும் நடத்தப்படும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவின் போது, உலக சாதனை முயற்சியாக 2,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் ஊக்கமருந்து எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story