கைப்பந்து லீக்: டெல்லியிடம் பணிந்தது கொல்கத்தா


கைப்பந்து லீக்: டெல்லியிடம் பணிந்தது கொல்கத்தா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 March 2024 11:31 PM GMT (Updated: 3 March 2024 11:33 PM GMT)

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ்- டெல்லி டூபான்ஸ் அணிகள் மோதியது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி 15-9, 16-14, 17-15 என்ற நேர் செட் கணக்கில் கொல்கத்தாவை தோற்கடித்தது. 6-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 4-வது வெற்றியாகும். கொல்கத்தாவுக்கு 5-வது தோல்வியாகும்.

மற்றொரு திரில்லிங்கான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆமதாபாத் டிபென்டர்ஸ் 15-9, 6-15, 15-11, 15-8 என்ற செட்டில் கொச்சி புளூ ஸ்பைக்கர்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது.

இன்றைய ஆட்டங்களில் ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ்- பெங்களூரு டார்படோஸ் (மாலை 6.30 மணி), சென்னை பிளிட்ஸ்- மும்பை மீட்டியார்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story