சென்னையில் நடைபெறும் 'ஏ' டிவிசன் கைப்பந்து: ஐ.ஓ.பி. அணி வெற்றி


சென்னையில் நடைபெறும் ஏ டிவிசன் கைப்பந்து: ஐ.ஓ.பி. அணி வெற்றி
x

லீக் ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி சுங்க இலாகா அணியை வென்றது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என். ஜெ. குழுமம் ஆதரவுடன் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 4-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி 25-20, 25-18, 18-25, 20-25, 17-15 என்ற செட் கணக்கில் வருமான வரியை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட ஓம் வசந்த் லாத்துக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

மற்றொரு திரில்லிங்கான ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி சரிவில் இருந்து மீண்டு வந்து 19-25, 22-25, 27-25, 25-12, 15-12 என்ற செட் கணக்கில் சுங்க இலாகாவை வென்றது.


Next Story