பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வில்வித்தை வீரர் திராஜ் பொம்மதேவரா தகுதி!


பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வில்வித்தை வீரர் திராஜ் பொம்மதேவரா தகுதி!
x

image courtesy; AFP

தினத்தந்தி 13 Nov 2023 7:35 AM GMT (Updated: 13 Nov 2023 11:46 AM GMT)

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பினை திராஜ் பொம்மதேவரா பெற்றுள்ளார்.

பாங்காக்,

தாய்லாந்தில் ஆசிய கண்டங்களுக்கு இடையிலான பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளுக்கு தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் தனிநபர் ரீகர்வ் பிரிவில் இந்திய வீரர் திராஜ் பொம்மதேவரா வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் 2024-ல் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் இறுதிப்போட்டியில் சீன- தைபே வீரரான லின் ஜிஹ் சியங்கிடம் 5-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இருந்தாலும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் மட்டும் போதுமானது. இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பினை பெற்றுள்ளார்.

மற்றொரு இந்திய வீரரான தருண்தீப் ராய் காலிறுதி சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை அன்கிதா பகத், காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.



Next Story