உலகக் கோப்பை வில்வித்தை: தங்கப்பதக்கம் வென்றது இந்தியா


உலகக் கோப்பை வில்வித்தை: தங்கப்பதக்கம் வென்றது இந்தியா
x

Image Courtesy : @worldarchery twitter

தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

ஷாங்காய்,

உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்-ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, தென் கொரியாவின் கிம் ஜோங்ஹோ-ஓ யோயூன் இணையை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த போட்டியில் ஓஜஸ் டீடேல்-ஜோதி சுரேகா வென்னம் ஜோடி 156-155 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. கடந்த மாதம் துருக்கியில் நடந்த உலகக் கோப்பை (நிலை 1) போட்டியிலும் இந்த இந்திய இணை தங்கம் வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரதமேஷ் ஜவகர் 149-148 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நெதர்லாந்தின் மைக் கிளாசருக்கு அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 19 வயதான பிரதமேஷ் ஜவகர் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.


Next Story